+2 Exam Results Released Tomorrow – School Education Department

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு – பள்ளிக் கல்வித் துறை

+2 Exam Results Released

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் நாளை (+2 Exam Results Released) (மே 6) தேதி வெளியிடப் படும் என பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

+2 Exam Results Released

தமிழகத்தில் +2 பொதுத் தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்.1-ல் தொடங்கி 13-ம் தேதியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன.  ஏற்கெனவே அறிவித்தபடி +2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 6) வெளியிடப்படுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in போன்ற இணையதளங்களில் மூலமும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம்.  பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top