2 Years Imprisonment for Campaigners Violating Election Rules: Sathyaprada Sahu Notice

தேர்தல் விதி மீறி பிரச்சாரம் செய்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை : சத்யபிரதா சாகு அறிவிப்பு

2 Years Imprisonment

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள  நிலையில் தேர்தல் பிரச்சாரம் நாளை (ஏப்ரல் 17) மாலை நிறைவடைந்த பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை களை மீறி தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது. தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை,  (2 Years Imprisonment) அபராதம் விதிக்கப்படும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

2 Years Imprisonment

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள முதற்கட்ட தேர்தலானது தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரம் வழக்கமாக இறுதி நாளில் மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடையும். இந்தாண்டு கோடை வெயிலை கருத்தில் கொண்டு மேலும் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டு நாளை மாலை 6 மணிக்கு பிரச்சாரம் நிறைவடையும். தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு இன்று அறிவித்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகள்

  • பிரச்சாரம் நாளை நிறைவடைந்த பின், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது.
  • தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது.
  • தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும்.
  • வாக்காளர் அல்லாதவர்கள் நாளை மாலை 6 மணிக்குள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்.
  • தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் யாரும் தங்கக்கூடாது  என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top