Broadway Bus Stand which Changes to Chennai Island

சென்னை தீவுத்திடலுக்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம்

Broadway Bus Stand

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் பிராட்வேயில் ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக அடுத்த சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் (Broadway Bus Stand) தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன.

Broadway-Bus-Stand

பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இங்கிருந்து மெட்ரோ ரெயில் நிலையம், புறநகர் ரெயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top