Nilgiris: Local Holiday Announced Tomorrow for the District on the Occasion of 126th Flower Fair

நீலகிரி:  126-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Nilgiris Local Holiday

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி 126-வது மலர் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுவதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் (Nilgiris: Local Holiday) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Nilgiris Local Holiday

ஊட்டி ரோஜா பூங்காவில் நாளை ரோஜா கண்காட்சி தொடங்க உள்ள  நிலையில்  அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலர் கண்காட்சியை யொட்டி நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் அருணா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 126-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேற்கண்ட விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 18-ந் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகும் கலெக்டர் அருணா என தெரிவித்துள்ளார்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top