Installation of Fan on Bus Driver’s Seat Started in Metropolitan Transport Corporation

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறி பொருத்தும் பணி தொடக்கம்

Installation of Fan on Bus Driver’s Seat

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழக அரசுப் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் மின்விசிறி (Installation of Fan on Bus Driver’s Seat) அமைக்கப்பட்டு வருகிறது. 600-க்கும் மேற்பட்ட வழித் தடங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர்கள் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிகின்றனர்.

Installation of Fan on Bus Driver's Seat

கோடை வெயில்

கோடை  வெப்பத்தால் போக்குவரத்து ஊழியர்கள் மிகுந்த சிரமத்தை எதிர் கொள்கின்ற நிலையில், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்டோருக்கு ORS கரைசல் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து பணிமனை, பேருந்து நிலையங்களில் குடிநீர் வசதியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, பேருந்து ஓட்டுநர் இருக்கையின் மேல்பறத்தில் மின்விசிறி அமைக்கும் நடவடிக்கையையும் மாநகர போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. அனைத்து பேருந்துகளிலும் துறை சார்ந்த அதிகாரிகள், பேருந்து ஓட்டுநர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் முதல் கட்டமாக சுமார் 1,000 பேருந்துகளில் மின்விசிறி அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 250-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மின்விசிறி பொருத்தப்பட்டு விரைவில் அனைத்து பேருந்துகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என கூறினர்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top