Parents Must have Smart Phone School Education Department Notification

மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் ‘ஸ்மார்ட் போன்’ வைத்திருப்பது கட்டாயம் – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

Parents Must have Smart Phone

மாணவ-மாணவிகளின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை தெரிந்து கொள்ள பெற்றோர்கள் “ஸ்மார்ட் போன்” (Parents Must have Smart Phone) வைத்திருப்பது அவசியம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Parents Must have Smart Phone

மாணவ-மாணவிகளின் கல்வி செயல்பாடுகளில் அதிக அக்கறைக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்-அப் செயலி வாயிலாக புதிய தளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த தளத்துடன் மாணவ-மாணவிகளின் பெற்றோரை இணைத்து அதில் கல்வித் துறை மற்றும் மாணவ-மாணவிகளின் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் கல்வி மேலாண்மை தகவல் முகமையில் (எமிஸ்) பதிவாகியிருக்கும் பெற்றோர், மாணவ-மாணவிகளின் செல்பன் எண்ளை சரிபார்க்கும் பணிகளை கல்வித்துறை முடுக்கியுள்ளது.

ஒரு கோடியே 25 லட்சம் செல்போன் எண்கள் எமிஸ் தளத்தில் இருப்பதாகவும், அதில் இதுவரை சுமார் 82 லட்சம் செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.அவ்வாறு சரிபார்க்கப்பட்ட எண்கள் பள்ளிக்கல்வித்துறை கொண்டு வர உள்ள வாட்ஸ்-அப் செயலி வாயிலான புதிய தளத்தில் இணைக்கப்பட உள்ளன. இணைக்கப்பட்ட எண்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பட்சத்தில் அதில் இந்த புதிய தளம் செயல்பட தொடங்குகிறது. பெரும்பாலானோரின் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்-அப் எண்ணில் ”டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜூகேஷன்” என்ற பெயரில் புதிய தளம் உருவாக்கப்பட்டு, கல்வித் துறை மற்றும் மாணவ-மாணவிகளின் கல்வி சார்ந்த செயல்பாடுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட்போன் இல்லாத பெற்றோர், குறைந்த விலையில் அதனை வாங்கி, கல்வி சார்ந்த செயல்பாடுகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top