New Invalid Marks System Introduced in TNPSC Group 4 Examination

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் புதிதாக “இன்வேலிட் மதிப்பெண்” முறை அறிமுகம்

New Invalid Marks System

TNPSC குரூப் 4:  தற்போது நடைபெற்று முடிந்த  குரூப் 4 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டு, புதிய முறை குறித்து தேர்வு மையத்தில் (New Invalid Marks System) தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

New Invalid Marks System

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி 30-தேதி வெியிட்டது.

ஆன்லைனில் இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை பெறப்பட்டன. குரூப் 4 தேர்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என்றபோதிலும், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்.ஃபில் முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் உட்பட சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 2 வாரங்களுக்கு முன்பு ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் குரூப் 4 எழுத்து தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெற்றது. தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தேர்வுக் கூடத்துக்கு வந்து விட வேண்டும் என தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வு மையங்களுக்குச் சென்றனர்.

இன்வேலிட் மதிப்பெண்:

  • குரூப் 4 தேர்வில் பொது தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு மற்றும் நுண்ணறிவு திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும்.
  • ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். அதோடு, இன்வேலிட் மதிப்பெண் என்ற முறையும் இந்த தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
  • ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும்.
  • இந்த புதிய முறை குறித்து தேர்வு மையங்களில் இன்று தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • முன்னதாக, ஹால் டிக்கெட்டிலும் இந்த விதிமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.

E ஆப்ஷன்: New Invalid Marks System

  • ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்படும் A, B, C, D ஆகிய 4 ஆப்சன்களில் பதில் எது என்று தெரியவில்லை என்றால் E என்ற கட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • கட்டாயம் ஏதாவது ஒரு கட்டத்தை நிரப்பி இருக்க வேண்டு.
  • ஒரு கேள்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்ஷன்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தால், E ஆப்சன் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் மதிப்பெண் இன்வெலிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்தபடி, குரூப்-4 தேர்வு முடிவுக் வரும் 2025 ஜனவரி மாதம் வெளியிடப்படும்.
  • தற்போது 6,244 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • குரூப்-4 தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. எனவே, எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு வேலை கிடைப்பது உறுதி என்பது கவனிக்கத்தக்கது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top