Parking is Free in Chennai Until the New Tender is Issued

சென்னையில் புதிய டெண்டர் விடும் வரை வாகன நிறுத்தம் இலவசம்

Parking is Free

சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்கு மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தியாகராய நகர் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து  சென்னையில் மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடங்களை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் சென்னை மாநகராட்சி (Parking is Free) அறிவுறுத்தியுள்ளது.

Parking is Free

இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்க்கு ரூ.5-ம், 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20-ம் கட்டணமாக வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிக கட்டண வசூலை தடுக்கும் வகையில் வாகனங்கள் நிறுத்த செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்துள்ளும் வகையில் ஸ்மார்ட் வாகனநிறுத்தம் செயல்படும் பகுதியில் 25மீட்டர் இடைவெளியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் முறையாக செயல்படவில்லை என்றும், வாகன ஓட்டிகளிடம் ரூ.300 வரை பார்க்கிங் கட்டணம் வசூலித்ததாக காவல்துறை வழக்கு வரை சென்றதாகவும் புகார் வந்தது. இதனை அடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ரம் பார்க்கிங் ஒப்பந்தத்தை ரத்து செய்தது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த அடிப்படையில் சென்னையில் மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடங்களை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top