Thamizhaka Vetri Kazhagam District Administrators Meeting Date Announcement!!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத் தேதி அறிவிப்பு!!

Thamizhaka Vetri Kazhagam

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம்  (Thamizhaka Vetri Kazhagam) என்ற அரசியல் கட்சியை தொடங்கி அவ்வப்போது நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிற நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும் 18ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thamizhaka Vetri Kazhagam

18ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வருவதை அுத்து அன்றைய தினம் மாநிலம் முழுவதும் செய்ய வேண்டிய நலத்திட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்ததும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top