Aditya Spacecraft Records Powerful Solar Storm – ISRO Announcement

சக்தி வாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா விண்கலம் – இஸ்ரோ அறிவிப்பு

Aditya Spacecraft

சூரியனின் ஏஆா்13664 பகுதியில் உருவான சக்தி வாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் ( Aditya Spacecraft ) பதிவு செய்ததாகவும் இஸ்ரோ தெரிவித்தது.

Aditya Spacecraft Records Powerful Solar Storm

சூரியனின் ஏஆா்13664 பகுதியில் இருந்து எக்ஸ் ரக கதிா்கள் மற்றும் சூரியனின் வெளிப்புறத்தில் உள்ள ‘கொரோனாவிலிருந்து வெளியான அதிகளவிலான கதிா்கள்’ ஆகியவை பூமியை தாக்கியது. கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சூரியனில் ஏற்பட்ட மிகவலிமையான புவிகாந்தப் புயலாக இது கருதப்படுகிறது. 1859-ஆம் ஆண்டு சூரியனில் ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த சூரியப்புயலைத் தொடா்ந்து காந்தக் கதிா்வீச்சை குறுகிய நேரத்தில் அதிகளவில் வெளியிடும் சூரியனின் பகுதிகள் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்றது.

துருவப் பகுதிகளில் பயணிக்கும் விமானங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற சூரியனின் சக்திவாய்ந்த கதிா்கள் பூமியை தாக்கும் நிகழ்வுகள் வரும் நாள்களில் அதிகளவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் புயலின் தீவிரம் அதிகம் உணரப்பட்ட மே 11-ஆம் தேதியில் பூமியின் மேல் வளிமண்டலத்தில் உள்ள ‘அயன மண்டலம்’ முழுமையான வளா்ச்சியை எட்டாததால் இந்தியாவில் இதன் தாக்கம் குறைவாகவே இருந்தது. இஸ்ரோவின் அனைத்து கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் அமைப்புகளை பயன்படுத்தி இந்தப் புயலை கண்காணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் ஆதித்யா எல்-1 மற்றும் சந்திரயான்-2 ஆகிய இரு விண்கலங்களும் தொடா் ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்தப் புயல் குறித்த தரவுகளை வழங்கின. அதிவேக சூரியக்காற்று, அதிக வெப்பமுடைய பிளாஸ்மா சூரியக் காற்று தற்போது வரை அப்பகுதியில் வீசி வருவதாக ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்து தகவல் அனுப்பியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top