Assistant Professor Vacancies – Additional Time to Apply

உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

Assistant Professor Vacancies

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசுக் கல்வியியல் கல்லூரிகளுக்கான தமிழ்நாடு கல்லூரிக் கல்விப் பணியில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மார்ச் 14 ஆம் தேதி வெளியிட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Assistant Professor Vacancies 

TN TRB Assistant Professor வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்தியப் பல்கலைக் கழகத்திலிருந்து சம்பந்தப்பட்ட / தொடர்புடைய / தொடர்புடைய பாடத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் அல்லது அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்திலிருந்து அதற்கு சமமான பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  4000 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் 01-07-2024 தேதியின்படி 57 வயது பூர்த்தியடைந்திருக்கக் கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரர்ப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

உதவிப்‌ பேராசிரியர்‌ பணிக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 29 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில்‌, விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின்‌ அடிப்படையில்‌ உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பெறுவதற்கான கடைசி தேதி 29.04.2024 லிருந்து 15.05.2024 மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top