Chitra Pournami: Tamil Nadu Transport Corporation Announces Operation of Special Buses to Tiruvannamalai

சித்ரா பவுர்ணமி:  திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

Chitra Pournami

சித்ரா பவுர்ணமியை (Chitra Pournami) முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23  ஆகிய 2 நாட்களில் சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கவும், சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Chitra Pournami

சிறப்பு பேருந்துகள்

  • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ஏப்ரல் 22 அன்று 527 பேருந்துகளும் மற்றும் ஏப்ரல் 23 அன்று 628 பேருந்துகளும் இயக்கபட  உள்ளது
  • சென்னை மாதவரத்திலிருந்து ஏப்ரல் 22 அன்று 30 பேருந்துகளும் ஏப்ரல் 23 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.
  • பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22 அன்று 910 பேருந்துகளும் 23 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.
  • அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top