Indigo Airlines: Introducing a New Facility for Women Passengers

இண்டிகோ ஏர்லைன்ஸ்: விமானத்தில் பயணிக்கும் பெண்களுக்கு புதிய வசதி அறிமுகம்

Indigo Airlines:

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், பெண் பயணிகளுக்குத் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பெண் பயணிகளின் அருகில் உள்ள இருக்கையைத் தேர்வு செய்யும் வசதியை அறிமுகப் படுத்தி உள்ளது, தனியாக விமானத்தில் பயணிக்கும் பெண்களுக்கு புதிய வசதி இண்டிகோ ஏர்லைன்ஸின் முயற்சிக்கு பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Indigo Airlines

விமானப் பயணத்தின் போது பெண் பயணிகள், சக ஆண் பயணிகளால் பாலியல் சீண்டல் களுக்கு ஆளாகும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்கள் மீது நடவடிக்கையும் பாய்ந்தது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளால், தனியாக விமானப் பயணத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்கும் வகையில் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் முன்பதிவின் போது புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் பெண் பயணிகளுக்கு பயண அனுபவத்தை மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பெண் பயணிகள் விமான முன்பதிவின் போது இணைய செக்கின் ஆப்ஷனில், ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்களின் பெயர்களை காணும் வகையில் சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது. PNR(Passanger Name Record) தரவுகள் அடிப்படையில், தனியாக பயணம் செய்யும் பெண்கள், முன்பதிவு செய்த பெண் பயணிகளின் அருகில் உள்ள இருக்கையைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் உருவாக்கியிருந்த பெண் சக்தி திட்டத்தின் பெண்களுக்கு அதிகாரமளித்தல் நெறிமுறைகளுக்கு உட்பட்டும் , பல்வேறு சந்தை ஆராய்ச்சிகளுக்கு பிறகும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் அனைத்துப் பயணிகளுக்கும் இணையற்ற மகிழ்ச்சியான சேவையை வழங்க நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் மேற்கொண்டுள்ள இந்த புதுவித முயற்சிக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top