Launch of College Dream Program to Guide Higher Education in Naan Muthalvan Project

நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடக்கம்

Launch of College Dream Program

தமிழக அரசு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி, (Launch of College Dream Program ) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இன்று முதல் 13-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

Launch of College Dream Program

 

கடந்த 2022 ஜூன் 25-ம் தேதி 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2022-23 கல்வியாண்டில் அரசு பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 3,30,628 மாணவர்களில் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் மூலமாக 2,43,710 மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், சட்டம், பாலிடெக்னிக் மற்றும் இதர உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப். 29-ம் தேதி கயம்புத்தூரில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “கல்லூரிக் கனவு 2024” நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததையடுத்து, மாவட்ட வாரியாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் மே 8-ம் தேதி நடைபெறுகிறது.

மே 8-ம் தேதி (இன்று) சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், மதுரை, திருநெல்வேலி, சேலம் மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பங்கேற்கிறார். மே 9-ம் தேதி (நாளை) திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், தருமபுரி மாவட்டங்களிலும், மே 10-ம் தேதி செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரியிலும், 11-ம் தேதி காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, திருப்பத்தூரிலும், மே 13-ம் தேதி ராணிப்பேட்டை, தென்காசி, நாமக்கல், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top