May Ration Items can be Purchased in June too – Tamil Nadu Government Notification

 

மே மாத ரேஷன் பொருட்களை ஜூனிலும் வாங்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு

May Ration Items

குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம்  நியாயவிலைக் கடைகளிலிருந்து பெறும் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜுன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

May Ration Items

தமிழக அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது, பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கள்முதல் செய்வதில் கால தாமதம் நேரிட்டது. இருப்பினும் அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு நேற்று (மே 27) 82,82,702 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு கிலோ துவரம் பருப்பினையும் 75,87,865 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டினையும் நியாயவிலைக் கடைகளிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

  • துவரம் பருப்பு 24,96,510 கிலோ மற்றும் 33,57,352 பாமாயில் பாக்கெட்டுகள் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல தயார் நிலையிலும் 8,11,000 கிலோ துவரம் பருப்பு மற்றும் 7,15,395 பாமாயில் பாக்கெட்டுகள் கிடங்குகளில் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பும் பொருட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
  • மீதம் பெற வேண்டிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெற்று விரைவாக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
  • குடும்ப அட்டை தாரர்களுக்கு மே மாத ஒதுக்கீட்டினை இம்மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • மே 2024 மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக,
  • ஜுன் மாதம் முதல் வாரம் வரை நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி
  • மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
  • குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு,
  • மே மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான மே மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை
  • ஜுன் மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top