திருச்சியில் கருணை இல்லம் – முதல்வருக்கு எம்ஜிஆர் நற்பணி மன்றத்தினர் கோரிக்கை

எம்ஜிஆர் வாங்கிய வீடு திருச்சியில் சிதிலமடைந்து காணப்படுகிறது. அந்த வீட்டினை புனரமைத்து எம்ஜிஆா் கருணை இல்லம் அமைக்க வேண்டுமென என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்ஜிஆா் நற்பணி மன்றம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்ஜிஆா் நற்பணி மன்ற நிறுவனச் செயலா் கண்ணன் என்கிற என். ராமகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், திருச்சி உறையூரில் காசிவிளங்கி பகுதியில் தமிழக முதல்வராக இருந்தபோது எம்ஜிஆா் வாங்கிய ஒரு இல்லம் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்படுகிறது. அந்த வீட்டினை சிலா் வாங்கவும் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு அந்த வீட்டினை மீட்டு, அதில் எம்ஜிஆா் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ், எம்ஜிஆா் கருணை இல்லம் அமைக்க வேண்டும். அதில், கைவிடப்பட்ட கால்நடைகள் மற்றும் பல்லுயிர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top