My Name Will be in the List of Candidates in 2026 – Actor Vishal Announces

2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இடம் பெறும் – நடிகர் விஷால் அறிவிப்பு

Actor Vishal

2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலில் என் பெயர் இருக்கும் என நடிகர் விஷால் (Actor Vishal) தெரிவித்துள்ளார் . அந்த பட்டியலில் மக்கள் தேர்வு செய்ய நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நிச்சயம் மிகப்பெரிய பட்டியலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Actor Vishal

சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஷால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். செல்லமே படம் வரும் போது சில திரையரங்குகள் இருந்தன. பூஜை படம் வரும் போது, மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் வந்தன. இன்று தியேட்டர் சென்றால், 6,7 படங்கள் இருக்கு அதில் நீங்கள் எது வேண்டுமோ அதற்குச் செல்லலாம். மக்கள் ஓடிடியில் அனைத்து தரப்பு படங்களையும் பார்த்துவிட்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது. அதே போல தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டி யிடுபவர்களின் பட்டியலும் இருக்கும். அந்த பட்டியலில் மக்கள் தேர்வு செய்ய நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நிச்சயம் மிகப்பெரிய பட்டியலாக இருக்கும். 2026 தேர்தலில் தனியாகத்தான் வருவேன். முதலில் நான் யார் என்பதை காட்ட வேண்டும். பிறகுதான் கூட்டணி. அடுத்த கட்ட விஷயங்களை பின்பு பார்ப்போம் என்று கூறினார். நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் நிலையில், விஷாலும் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் தனது திட்டத்தை அறிவித்துள்ளார்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top