Second Phase of Polling Will Begin Tomorrow in 89 Constituencies

89 தொகுதிகளில் நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

Second Phase of Polling

முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்றதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (Second Phase of Polling ) நடைபெற உள்ளது.

Second Phase of Polling

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதியுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. இதன் காரணமாக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று அமராவதி, சோலாபூரில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பரப்புரை மேற்கொள்கிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேரளா மாநிலம் ஆலப்புழாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top