Thoothukudi: Local Holiday on May 22 District Collector Notification

தூத்துக்குடி: மே 22-ல் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Thoothukudi Local Holiday

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வைகாசி விசாகத்தை முன்னிட்டு  அம்மாவட்டத்துக்கு மே 22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை (Thoothukudi: Local Holiday) என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Thoothukudi Local Holiday

சூரனை சம்ஹாரம் செய்ய அவதரித்த முருகப் பெருமானின் அவதார நட்சத்திர தினம் வைகாசி விசாக நட்சத்திரம் எனப்படுகிறது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகின்ற 22ஆம் தேதி நடைபெறுகிற நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் ஜூன் 8 (சனிக்கிழமை) ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top