Two-way Traffic starts on Trichy Aristo flyover

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் இருவழிப்பாதை போக்குவரத்து தொடக்கம்

திருச்சியின் மையப் பகுதியாக விளங்கும் மத்திய பேருந்து நிலையம் அருகில் அரிஸ்டோ மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதனைஆய்வுச் செய்தார்ப்போலீஸ் கமிஷனர் சத்யப்ரியா.

மேம்பாலத்தின் ஒரு பகுதி ராணுவக்கட்டுப்பாட்டில் இருந்ததால் பாலம் முழுமை பெறாமல் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ராணுவத்தின் முழு ஒப்புதல் பெற்று பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு கடந்த மே மாதம் 29 தேதி பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இருவழியிலும் போக்குவரத்து சென்றுவந்த நிலையில் விபத்து ஏற்படும் என கருதி போலீசார் ஒருவழிப்பாதையாக மாற்றினர். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசல் காரணமாக உரிய நேரத்தில் செல்ல முடியாததால் மீண்டும் இருவழியாக மாற்றப்பட்டது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top