UGC NET Exam Date Change – Central Government Staff Selection Commission Notification

யு.ஜி.சி நெட் தேர்வு தேதி மாற்றம் – மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

UGC NET Exam Date Change

சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக யு.ஜி.சி நெட் தேர்வு வரும் ஜூன் 18-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

UGC NET Exam Date Change 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் 2024-ம் ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு, வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதி நடைபெறுகிறது. அதே நாளில், கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. நெட் தேர்வும் நடைபெறும் என்று யு.ஜி.சி. அறிவித்திருந்தது.
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும், யு.ஜி.சி நெட் தேர்வுக்கும் தயாராகி வந்த தேர்வர்களுக்கு, இது சிக்கலை ஏற்படுத்தியதன் காரணமாக, யு.ஜி.சி நெட் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்வர்கள் யு.ஜி.சி.யிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட யு.ஜி.சி., உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி நெட் தேர்வு, ஜூன் 18-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top