You Can Apply for A New Family Card on 5th June!!

புதிய குடும்ப அட்டை பெற ஜூன் 5ம் தேதி விண்ணப்பிக்கலாம் !!

New Family Card

இன்று முதல் எளிதாக விண்ணப்பித்து புதிய குடும்ப அட்டை (New Family Card) பெற முடியும். நேற்றுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருவதால் அரசு புதிய திட்டங்களை அறிவிக்க முடியும். அதேபோல் மக்கள் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கலாம். மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் குறித்த அறிவிப்பும் அடுத்த வாரத்தில் வெளியாகலாம்.

New Family Card

பல நாட்களாக குடும்ப அட்டை பெற முடியாமல் தவித்த மக்களுக்கு நாளையுடன் நல்ல செய்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக குடும்ப அட்டை பெற முடியாமல் தவிக்கிறார்கள். அதேபோல் குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்ய முடியாமலும் தவித்து வந்தார்கள். அவர்கள் நாளை மறுநாள் முதல் எளிதாக மாற்றங்களை செய்ய முடியும். தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி இந்த வாரம் முதல் தொடங்குகிறது. இதன் காரணமாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன கார்டு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது சுமார் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் இருக்கின்றன. குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு மானிய விலையிலும், விலையில்லாமலும் அரிசி சர்க்கரை, பருப்புகள், பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. குடும்ப அட்டை இருந்தால் பல்வேறு சலுகைகள் பெறலாம். அரசு அறிவிக்கும் பொங்கல் பரிசு, நிவாரண தொகைகளை பெற முடியும். இதுதவிர அரசின் நிதி மானியங்களையும் பெற முடியும்.

  • தற்போது சுமார் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் இருக்கின்றன.
  • குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு மானிய விலையிலும், விலையில்லாமலும் அரிசி சர்க்கரை, பருப்புகள், பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
  • குடும்ப அட்டை இருந்தால் பல்வேறு சலுகைகள் பெறலாம். அரசு அறிவிக்கும் பொங்கல் பரிசு, நிவாரண தொகைகளை பெற முடியும்.
  • இதுதவிர அரசின் நிதி மானியங்களையும் பெற முடியும்
    தமிழகத்தில் பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் நேரடியாக இனி விண்ணப்பம் செய்யலாம். அல்லது இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் நகல் ஸ்மார்ட் கார்டு, கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற அத்தனை சேவைகளையும் நாளை மறுநாள் முதல் மேற்கொள்ளலாம்.
  • ரேஷன் கார்டு வாங்கியவர்களுக்கு அடுத்த வாரத்திலேயே மகளிர் உரிமை தொகை குறித்து விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுக்க வாய்ப்பு உள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top